Home English Tamil
     
   
 
 இலங்கையில் ஒரு வருடத்தில் 20,000 பேருக்கு புற்றுநோய்
 

22.09.2012 - சனிக்கிழமை

இலங்கையில் புற்றுநோயின் தாக்கம் மிகவும் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தில் 20,000 புற்றுநோயாளர்கள் புதிதாக இனங்காணப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வாய் புற்றுநோய், கர்ப்பப் புற்றுநோய், நுரையீரலில் புற்றுநோய் உள்ளிட்ட 10 வர்க்க புற்றுநோய்கள் இலங்கையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் வருடத்தில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெறும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 800 ஆகும்.

அத்துடன் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நாளொன்றில் 900 புற்றுநோயாளர்கள் சிகிச்சைப் பெறுகின்றனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.