 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வடக்கில் கடும் வரட்சி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் நடவடிக்கை! |
| | | 21.09.2012 - வெள்ளிக்கிழமை
வடக்கில் கடும் வரட்சி, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்றமையால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கிலுள்ள ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள், கிணறுகள் என அனைத்தும் வற்றிய நிலையிலேயே காட்சியளிக்கின்றன. இதனால், மக்கள் குடிநீர் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதுடன், கால்நடைகளும் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமிருந்து குடிநீர் விநியோகத்துக்காக பத்துக்கு மேற்பட்ட தண்ணீர் பவுசர்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தக் குடிநீர் விநியோகம் குறித்த மாவட்ட அரசாங்க அதிபர்களின் பொறுப்பின் கீழ் பிரதேச செயலர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது. கிளிநொச்சியில் பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை, கரைச்சி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி, தீவகம், வடமராட்சி, வலிகாமம் உள்ளிட்ட பிரதேச செயலகங்களுக்கும் இந்தக் குடிநீர் பவுசர்கள் விரைவில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
நேற்றைய தினம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வடக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி நிலையைப் பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தபோதே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, அடுத்த கட்டமாக வரட்சி நிவாரணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பணிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |