Home English Tamil
     
   
 
 புத்தளத்தில் மட்பாண்ட உற்பத்திக் கிராமம் அங்குரார்பணம்
 

21.09.2012 -  வெள்ளிக்கிழமை    

புத்தள மாவட்டத்தில் ஆனமடுவ பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  பகுதியில் மட்பாண்ட உற்பத்தி கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.


இதன்போது உரையாற்றிய அமைச்சர் அவர்கள் மட்பாண்ட உற்பத்தி கிராம மட்டத்திலேயே முன்னெடுக்கப்படுவதுடன், கிராமமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். அதனூடாக அவர்கள் தமது சொந்தகால்களில் நின்று சுயபொருளாதாரத்தில் முன்னேற முடியுமெனத் தெரிவித்தார். 

இதில் மட்பாண்ட உற்பத்தி கிராமம் பொதுச்சேவை மத்தியஸ்தானம் அமைக்கப்பட்டு மட்பாண்ட தொழில் உபகரணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்; பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்க, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, அமைச்சின் செயலார் சிவஞானசோதி, கைத்தொழில் அபிவிருத்தி சபை பொது முகாமையாளர், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் புத்தள மாவட்ட பிரதிப்பணிப்பாளர், சிரேஸ்ட உதவிச் செயலாளர், உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.