 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வலி.கிழக்கு பிரதேசசபையின் தவிசாளரின் அதிகாரப் போட்டியினை நிறுத்தி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைப்பதற்கு முன்வர வேண்டும் |
| | | 20.09.2012 - வியாழக்கிழமை
வலி.கிழக்கு பிரதேசசபையின் தவிசாளரின் அதிகாரப் போட்டியினை நிறுத்தி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச இணைப்பாளரும், வலிகிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான இ.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14.09.2012ம் திகதி சபைக் கூட்டத்தில் செயலாளர் மீது உண்மைக்குப் புறம்பான கூற்றச்சாட்டுக்களை முன்வைத்து செயலாளரை இடமாற்றம் செய்வதற்கு தவிசாளர் தனது அணியினரின் ஆதரவுடன் மேற்கொண்ட தீர்மானத்தை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வலி.கிழக்கு பிரதேசசபையினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கைப்பற்றி ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையிலும் தவிசாளரின் அதிகாரப்போட்டியால் இன்று வலி.கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகம் குழம்பிப்போய் உள்ளது. ஆகவே இதற்கு சரியான ஒரு தீர்வினைக் காணவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே வலி.கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நாங்கள் இருக்கின்றோம்.
தவிசாளர் தனது நிர்வாக மோசடி நடவடிக்கைகளை மறைக்கவும், தன்னுடன் ஒத்துழைக்காத செயலாளரை பழிவாங்கவும் தவிசாளர் மேற்கொண்ட முயற்சியே கடந்த 30.08.2012 தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய உற்சவத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு எதிராக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஆகியோரினால் செயலாளரினால் அனுப்பி வைக்கப்படாத முறைப்பாடு தொடர்பாக ஆராய்தல் என்று தவிசாளர் செயலாளருக்கு எதிராக கூட்டத்தினை கூட்டி செயலாளர் அபிவிருத்திக்குத்தடை என்றும், செயலாளர் தகுதி அற்றவர் என்றும் உண்மைக்குப்புறம்பான பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்ற அதிகாரிகளை இழிவுபடுத்தும் செயலே வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மேற்கொண்டிருக்கின்ற தீர்மானம் ஆகும்.
வலி.கிழக்கு பிரதேச சபையினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் கடந்த ஒருவருடகாலமாக இதே செயலாளர் அவர்களால் தான் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னரும் இதே செயலாளர் அவர்களால் தான் எமது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களாலும், கௌரவ யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களுடனும் இணைந்து பல அபிவிருத்திகளை செய்தும், செய்து கொண்டும் இருக்கின்றார்.
கடந்த 1972ம் ஆண்டிற்கு பிற்பாடு தற்போதுதான் ஆதன மதிப்பீடுகளை உரும்பிராய், அச்சுவேலி உப அலுவலகங்களுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகுதி இடங்களிலும் ஆதன மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அவர்கள் தன்னுடைய சுயநலத்திற்காகவும், தங்களுடைய சுயலாப அரசியலிற்காகவும் செயலாளர் அவர்களை இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் வலி.கிழக்கு பிரதேச சபையில் கடந்த ஒரு வருட காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள் தொடர்பாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கட்கு பின்வரும் விடயங்களை எழுத்து மூலம் தெரியப்படுத்தி இருந்தோம்.
டெங்கொழிப்பு நடவடிக்கையின் கணக்கறிக்கை, அச்சுவேலி சந்தைக் கட்டிடக் கொடுப்பனவு, இருபாலை, ஊரெழு மாட்டு இறைச்சிக்கடை தொடர்பாக, புதிதாக உழவியந்திரம் பெட்டி கொள்வனவு செய்தல் தொடர்பாக பகிரங்க கூறுவிலை கோரமை, இந்துசிட்டி மயானத்தில் விளையாட்டு மைதானம் அமைத்தல். தொடர்பாக விளக்கம் கோரி பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் தவிசாளர் அவர்களிடம் எழுத்து மூலம் அறிக்கை கோரப்பட்டிருந்தது அதனைக் கூட வழங்க முடியாத வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அவர்கள் எவ்வாறு செயலாளர் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்க முடியும்.
நாங்கள் கொள்கை ரீதியிலோ, அல்லது கட்சி ரீதியிலோ, வேறுபாடுகள் இருந்தாலும் அபிவிருத்தி என்று வரும் போது மக்களுக்கு பயனளிக்கும் விடயம் என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடைய எங்களுடைய கௌரவ அமைச்சரும் செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்களுடைய பணிப்புரைக்கமைய பலதிட்டங்களை நாங்கள் சபையிலே ஆதரித்திருந்தோம.; இருந்தும் தவிசாளர் அதனை உதாசீனம் செய்ததன் காரணத்தினலே இன்று வலி.கிழக்கு பிரதேச சபை அபிவிருத்தி இல்லாமல் காணப்படுகின்றது ஆகவே நாங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் சுயநலம்; அற்ற சேவையினைதான் நாங்கள் எங்களுடைய மக்களிற்கு வழங்குகின்றோம். ஆகவே இது தொடர்பாக தவிசாளர் பகிரங்க விவாதத்திற்கு தயாரெனில் நாங்கள் என்றும் தயாராக உள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆகவே இனிவரும் காலங்களில் ஆவது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும், அறிக்கைகளையும் வெளியிடாமல் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |