Home English Tamil
     
   
 
 இந்தியா சென்றுள்ள ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!
 

20.09.2012 - வியாழக்கிழமை

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இந்திய பள்ளம் விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இதன்போது இந்திய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் பூகோளவியல் அமைச்சர் அஷ்வினி குமார், இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

இந்திய – மத்திய பிரதேஸ் சான்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள தர்ம தம்ம பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தியா விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்த்தன, செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

இன்றைய தினம் மாலை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இரவு விருந்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்திய பிரதமர் உட்பட ஏனைய சிரேஷ்ட தலைவர்களுடனும் இரு தரப்பு உறவுகள், தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.