20.09.2012 - வியாழக்கிழமை
தமிழ் பேசும் மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கு அமெரிக்க என்றும் உறுதுணையாக நிற்கும் என இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜெ.சிசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண நூலகத்திற்கு நேற்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட அவர் யாழ்.நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தெற்காசியாவில் சிறந்த நூலகமாக கருதப்பட்ட நூலகத்தை பார்த்தமையை நான் பெருமையாக நினைக்கின்றேன். யாழ்.குடாநாட்டில் முதல் தடவையான எனது பயணம் அமைந்துள்ளது.
இதில் மக்களின் உண்மையான அன்பை பெற்றிருக்கின்றேன் என நினைக்கின்றேன். கல்வியில் யாழ்.மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புலமையடைய அமெரிக்கா தன்னாலான உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றது யாழின் பெருமையான இந்த நூலகம் தீவைக்கப்பட்டமையானது மிகவும் வேதனையான விடயம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நான் நினைக்கின்றேன் என்றார்
இந் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர், பிரதம நூலகர் மற்றும் நூலக ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். |