Home English Tamil
     
   
 
 ரயில் குறுக்கு வீதிகளுக்கு மின்சார வீதி சமிக்ஞை மற்றும் எச்சரிக்கை மணி
 

20.09.2012 – வியாழக்கிழமை

நாட்டிலுள்ள பாதுகாப்பற்ற 230 ரயில் குறுக்கு வீதிகளில் மின்சார வீதி சமிக்ஞை மற்றும் மின்சார எச்சரிக்கை மணிகளைப் பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய விலைமனு தற்போது கோரப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.எ.பீ.ஆரியரத்ன தெரிவித்தார்.

நாட்டில் பாதுகாப்பற்ற சுமார் 700 ரயில் குறுக்கு வீதிகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார வீதி சமிக்ஞை மற்றும் மின்சார எச்சரிக்கை மணிகளை அமைப்பதன் ஊடாக விபத்துக்களை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.