 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வடமாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்! |
| | | 19.09.2012 - புதன்கிழமை
வடமாகாணத்தில் கல்வித்துறை செயற்றிட்டங்களை உலகவங்கி நிதியுதவியுடன் மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு இன்றைய தினம் (19) வருகை தந்த வடமாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது வடமாகாணத்தில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறான அபிவிருத்தி செயற்றிட்டங்கள் வடமாகணத்திலுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள புதிய கட்டிடங்கள், பௌதீக வளங்கள், உள்ளிட்ட கல்வித்துறைசார்ந்த விரிவாக்க நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
5 வருடங்களுக்கு உலகவங்கியின் (TSEP) செயற்றிட்டங்கள் ஊடாக மேற்குறிப்பிட்ட திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |