 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்வு |
| | | 19.09.2012 - புதன்கிழமை
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் செயற்றிட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் இதன் போது உறுதிபடத் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.
யாழ்ப்பாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை தலைமையில் இ;ன்றைய தினம் இக் கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன், யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அருந்தவநாதன், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.






|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |