 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | உதயபுரத்துக்கான மின்விநியோகத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார். |
| | | 19.09.2012 - புதன்கிழமை
அரியாலை தென்கிழக்கு உதயபுரம் பகுதிக்கான மின்சார விநியோகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அரியாலை கிழக்கு உதயபுரம் மக்கள் அமைச்சர் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ் மின்விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் மின்சாரத்தின் ஊடாக அப்பகுதி மக்கள் நன்மையடையவுள்ளன. இதன் மூலம் அப்பகுதி மாணவர்களின் கற்றல் நடவடிக்கை மற்றும் சுயதொழில்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), ஈ.பி.டி.யின் நல்லூர் பிரதேச அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான அம்பலம் ரவீந்திரதாசன், யாழ்.மின்அத்தியட்சகர், கிராமஅலுவலர் ஞானேந்திரன், பொதுமக்கள் உட்பட பலர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.





|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |