Home English Tamil
     
   
 
 அமரர் திருமதி செல்லம் அப்புத்துரையின் உறவினருக்கு அமைச்சர் ஆறுதல் தெரிவிப்பு!
 

14.09.2012 - வெள்ளிக்கிழமை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமரர் திருமதி செல்லம் அப்புத்துரையின் உறவினர்களுக்கு ஆறுதலையும், அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.

யாதம்பை மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி செல்லம் அப்புத்துரையின் இல்லத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களுடன் கலந்துரையாடி, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

நேற்று முன்தினம் காலமான அமரர் திருமதி செல்லம் அப்புத்துரைக்கு இறக்கும் போது 70 வயதாகும். இவரது இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது ஈ.பி.டி.பியின் வலிகாமம் அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) உடனிருந்தார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.