Home English Tamil
     
   
 
 கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் விஜயம்!
 

13.09.2012 - வியாழக்கிழமை

வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.

கிளிநொச்சிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட மேற்படி குழுவினர் பரந்தனில் அமைந்துள்ள மாவட்ட விவசாய உற்பத்தி நிலையத்திற்கு சென்று, அதன் செயற்திட்டங்கள் தொடர்பாக துறைசார்ந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன், மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இக்குழுவினர் அதன் அபிவிருத்தி மேம்பாடு மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் துறைசார்ந்தோரிடமும் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட மேற்படி குழு கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டது.

இன்றைய விஜயத்தின் போது 54 நாடுகளைச் சேர்ந்த 57 பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் 58 வது பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, 850 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், 176 அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாதம் 7ம் திகதி முதல் 15 ம் திகதிவரை இம்மாநாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.