 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் மக்களுக்கான உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் |
| | | 13.09.2012 - வியாழக்கிழமை
வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் மக்களுக்கான உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடபிராந்திய நல்லொழுக்க சம்மேளனத்தால் உடுவில் பிரதேசத்திலுள்ள புற்றுநோயாளர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (13) பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சம்மேளனத்தின் செயலாளர் குமாரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போது நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தொலைநோக்குப் பார்வையுடன், நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுமானால் அவர்கள் அவ்வுதவிகளைக்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் இவ்வுதவித்தொகை அவர்களுக்கான உதவித்தொகையாக இருப்பினும், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடாகவும் உதவித்திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து பயனாளிகளுக்கான உதவு தொகையினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன் உள்ளிட்ட அதிதிகள் வழங்கி வைத்தனர். இதன்போது இப்பிரதேசத்திலுள்ள 47 பயனாளிகளுக்கு உதவுதொகை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதேச செயலர் நந்தகோபாலன், வலிகாமம் வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் நடராசா, ஈ.பி.டி.பியின் வலிவடக்கு பிரதேச அமைப்பாளரும், வலிவடக்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயபாலசிங்கம் அன்பு, பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |