Home English Tamil
     
   
 
 மாவைகலட்டி, கொல்லங்கலட்டி போன்ற பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான வேலைதிட்டம் ஆரம்பம்!
 

13.09.2012 - வியாழக்கிழமை

வலிவடக்கில் மின்சாரம் வழங்கப்படாத மாவைகலட்டி, கொல்லங்கலட்டி போன்ற பகுதிகளுக்கான மின்சார இணைப்பு வழங்குவதற்கான வேலைதிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் சுபாஸ் எலக்ரிக்கல் நிறுவனம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து தெல்லிப்பளை சந்தி வரைக்கும், தெல்லிப்பளை சந்தியிலிருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் வரையும் 70 தூண்கள் நாட்டுவதுடன், கறுப்பு வயரினையும் பொருத்துதல்  போன்ற வேலைகளை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை, பிறேம் சந்த நிறுவனம் தச்சன் காட்டு சந்தியிலிருந்து கொல்லன்கலட்டி மடத்தடி வரையுமான ஒருகிலோமீற்றர் நீளம் கொண்ட 03 உயர்மின் அழுத்த கம்பிகளையும்,  மாவைகலட்டி, கொல்லங்கலட்டி போன்ற இடங்களுக்கு 04 கிலோமீற்றர் நீள சிறு வீதிகளுக்கு கறுப்பு மின்வயர்களையும் பொருத்துதல் போன்ற வேலையையும் ஆரம்பித்துள்ளன.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வலிவடக்கு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் செயற்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்கும்படி கடந்த 11 தெல்லிப்பளை பிரதேசசெயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இன்று மின் இணைப்புக்களுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் வலிவடக்கு அமைப்பாளரும், வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினருமான இ.ஜெயபாலசிங்கம் (அன்பு), மற்றும் தெல்லிப்பளை பிரதேசசபை உறுப்பினர் செ.திருஞானம் அவர்களும் இன்றைய தினம் மின்சார இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.