 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | மயிலிட்டித்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு புதிய கூறுவிலைமடம்...! |
| | | 23.08.2012 – வியாழக்கிழமை
வடமராட்சி பருத்தித்துறையில் மயிலிட்டித்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கூறுவிலை மடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (22) முற்பகல் 11.30 மணியளவில் பருத்தித்துறை வியாபாரிமூலையில் அமைந்துள்ள மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க அலுவலகத்திற்கு அருகாமையில், சங்கத்தலைவர் சுப்பையா யோகராசா தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
கடற்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தமது மீன்களை கூறல்விலை மூலம் விற்பனை செய்வது வழமை, ஆயினும் 22 வருடமாக இடம்பெயர்ந்த நிலையில் வாழும் அவர்களுக்கென ஒரு கூறுவிலை மடமின்றி அவர்கள் கடலில் இருந்து கொண்டுவரும் மீன்களை வெயில், மழை காலத்திலும் கரைநிலத்தில் கொட்டி, கூறல்விலை மூலம் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கென கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் ஒதுக்கீட்டில் 15 இலட்சம் ரூபா செலவில் இக்கூறுவிலைமடம் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்கடசித்தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச செயலர் திரு ஆர்.ரி.ஜெயசீலன், பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் தம்பிராசா மணீதரன், கடற்றொழில் பரிசோதகர் திரு சிவாகரன், கிராமசேவகர் எஸ்.வசந்தகுமார் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |