 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வடமராட்சி கிழக்கில் மீன்பதனிடும் நிலையம் திறந்து வைப்பு!
|
| | | 23.08.2012 - வியாழக்கிழமை
வடமராட்சி கிழக்கில் மீன்பதனிடும் நிலையம் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் (22) வடமராட்சி கிழக்கில் உடுத்துறை கிராம அலுவலர் பிரிவில் ஜெய்க்கா நிறுவன நிதியுதவியுடன் பாசிக் நிறுவனத்தால் 15 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மீன்பதனிடும் நிலையத்தை பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பாசிக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான சுயதொழில் கடனினை முழுமையாக செலுத்திய பயனாளிகளுக்கான பரிசில்களை பாராளுமன்ற உறுப்பினர் உதயன் உட்பட ஏனைய அதிதிகள் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்கட்சித் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், பாசிக் நிறுவனத்தலைவர் இனோயிக்கோ, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திருலிங்கநாதன், பாசிக் நிறுவன திட்ட முகாமையாளர் அஜித், பாசிக் நிறுவன திட்ட இணைப்பாளர் பிரபாகரன், மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாச பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |