 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | கலாசார மத்திய நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு |
| | | 23.08.2012 - வியாழக்கிழமை
அழிவடைந்து வருகின்ற கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாத்தவாறு எமது சமூகத்தை மேம்;படுத்த வேண்டும்; என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (22) வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலர் பிரிவிற்கான கலாசார மத்திய நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புலோலி, புற்றளைப் பகுதியில் கிராமஅலுவலர் மு.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற போது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தம் ஒய்ந்த அமைதிச் சூழலில் தமிழ்மக்கள் சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும் வாழ்ந்து வருகின்ற போதும்; எமது இனத்தின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் அழிவடைந்து வருகின்றன.
ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் தனித்துவமான கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் உள்ளன. அவ்வாறே எமது தேசிய பண்பாட்டு அடையாளங்களை அழிவடைய விடுவோமானால் நாம் எமது தனித்துவத்தை இழந்த இனமாக வாழ வேண்டிய துன்பியல்நிலை உருவாகும்.
எனவே இதனை நாம் நன்குணர்ந்தவர்களாக செயலாற்றுவதன் மூலமே அழிவடைந்து வருகின்ற கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.
முன்பதாக கலாசார மத்திய நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை பாராளுமன்ற உறுப்பினர் உதயன் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாட்டி வைத்தனர்.
கலாசார அமைச்சின் 17.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்கட்சித் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன், பிரதேச சபை உறுப்பினர் தம்பிராசா மணீதரன், ஒய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் வே.வீரகத்திப்பிள்ளை, ஒய்வுபெற்ற உள்ளூராட்சி மன்ற நூலகர் திருச்செல்வம், கிராமஅலுவலர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |