Home English Tamil
     
   
 
 2000 குளங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் குளங்கள் புனரமைப்பு
 

23.08.2012 - வியாழக்கிழமை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் '2000 குளங்கள் புனரமைப்புத் திட்டம்;' கீழ் குளங்கள் மட்டக்களப்பில் குளங்களை புனரமைக்கும் பணி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைவாக கண்டியனாறு மற்றும் இரும்பண்டகுளம் என்பவற்றின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இக்குளங்கள் உயர்த்தப்பட்டு வான்கதவுகள் அமைக்கப்படுவதனுடாக நீரின் கொள்ளளவினை அதிகரித்து காலபோக விவசாயச் செய்கையின் அளவை அதிகரிக்க உள்ளனர்.

இதனுடாக கண்டியனாறு, இரும்பண்ட குளம், பன்சேனை, பாவற்கொடிச்சேனை, காந்தினகர் கிராமங்களில் உள்ள விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவதுடன் பட்டிப்பளை, வவுணதீவுப் பிரதேச விவசாயிகளும் பயன்பெறவுள்ளனர்.

இரும்பண்ட குளம் 70 இலட்சம் செலவிலும், கண்டியனாற்று குளம் 90 இலட்சம் ரூபா செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.