Home English Tamil
     
   
 
 கடலில் கழிவுப் பொருட்கள் சேரும் விதத்தை கண்டறியும் புதிய செயற்திட்டம்
 

13.08.2012 - திங்கட்கிழமை

கடற்கரைகளிலும் கடலிலும் கழிவுப் பொருட்கள் சேர்கின்ற விதத்தை கண்டறிவதற்கான புதிய செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காணப்படுகின்ற கழிவுப் பொருட்களை வகைப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கண்ணாடி, பிளாஸ்டிக், கடதாசி, இரும்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படும் கழிவுப் பொருட்களின் நிறையும் கணிப்பிடப்படவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ரியல் அட்மிரல் எஸ்.ஆர்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது திரட்டப்படுகின்ற தகவலுக்கு அமைய கழிவுப் பொருட்கள் எவ்வாறு கடற்கரைகளில் குவிகின்றன என்பன தொடர்பாக ஆய்வு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அது தொடர்பான தகவல்கள் சர்வதேச சமுத்திர சூழல் பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் ரியல் அட்மிரல் எஸ்.ஆர்.சமரதுங்க கூறியுள்ளார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.