 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாக பராமரிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் கண்டறிந்தார். |
| | | 11.08.2012 - சனிக்கிழமை
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நாளைய இளைஞர் அமைப்பினால் யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல்தடாக நிலைமைகள் மற்றும் பராமரிப்பு தொடர்பான விடயங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்தார்.
இன்றுமாலை யாழ். மத்தியகல்லூரிக்குச் சென்ற அமைச்சரவர்கள் கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் விரிவாக கலந்துரையாடி உரிய ஆலோசனைகளை வழங்கியதுடன் பராமரிப்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்து உரிய பணிப்புரைகளையும் வழங்கினார். குறிப்பாக நீச்சல் பயிற்சி மற்றும் போட்டிகளில் ஈடுபடுவோரின் உடமைகளை பாதுகாப்பதற்கென உரிய பெட்டகங்கள் மற்றும் உடை மாற்றுவதற்குரிய உரிய வசதிகளை ஏற்படுத்துதல் நீச்சல் தடாகத்திற்குரிய குறியீடுகளை பார்வைப்படுத்துதல் போன்ற விடயங்களை குறித்து தெரியப்படுத்தினார்.
வடமாகாண பாடசாலைகளில் விளையாட்டுத்துறைக்கென ஓர் நீச்சல் தடாகம் இல்லாத குறையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரியப்படுத்தியதை அடுத்தே ஜனாதிபதியின் வேண்டுகோளின்பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முயற்சியின் பயனாக நாளைய இளைஞர் அமைப்பின் மூலம் மேற்படி நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டு இவ்வருடம் பெப்ரவரி மாதம் 06 ம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டமை நினைவுகூரத்தக்கதாகும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா அமைச்சரின் இணைச்செயலாளர் எம்.ராஜ்குமார் துறைசார் பொறியியலாளர் சூரியசேகரம் ஆகியோரும் பங்குகொண்டு கருத்துரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.






|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |