Home English Tamil
     
   
 
 எரிபொருளை விநியோகிக்க முன்னர் இரு முறை பரிசோதனை!        
 

11.08.2012 - சனிக்கிழமை

எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், அவற்றை சந்தைக்கு விநியோகிக்க முன்னர், கொலன்னாவை ஆய்வு கூடத்திலும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஆய்வு கூடத்திலும் இருமுறை பரிசோதனை செய்ய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய விநியோகிக்கப்படும் எரிபொருளின் தரம் தொடர்பிலான சான்றிதழை சபுகஸ்கந்த, கொலன்னாவை ஆய்வு கூடங்களில் பெற்றுக்கொண்ட பின்னரே சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.