Home English Tamil
     
   
 
 நெல்சிப் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு மக்களின் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல்
 

07.08.2012 - செவ்வாய்க்கிழமை

வேலணை பிரதேச சபையினால் நெல்சிப் (புறநெகும) திட்டத்தில் நிர்மாணம் செய்யப்படவுள்ள சந்தைக் கட்டிடத் தொகுதிற்கு மக்களின் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (7) புங்குடுதீவு வேலணை பிரதேசசபை உப அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச அமைப்பாளரும், வேலணை பிரதேச சபைத் தவிசாளருமான சின்னையா சிவராசா (போல்), பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் நெல்சிப் (புறநெகும )பிரிவில் குயஉவ அணியில் உள்ள திரு ஞானவேல்ராஜா, வேலணை பிரதேச சபை உறுப்பினர் ப.தயானந்தன், வேலணை பிரதேச சபை  உப அலுவலகப் பொறுப்பதிகாரி விஜயகுமார் புங்குடுதீவு மற்றும் வேலணை பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் கலாதரன,; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் புங்குடுதீவு பிரதேச அமைப்பாளர் சிவநேசன் ( நவம் தோழர் ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

புறநெகுமத் திட்டத்தினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.