 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | ஊரி பாலாவோடை பிட்டிஎல்லை மற்றும் தோப்புக்காடு ஆகிய கிராமத்திற்கான போக்குவரத்து சீரின்மை |
| | | 07.08.2012 - செவ்வாய்க்கிழமை
யாழ்.காரைநகர் ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் மற்றும் யாழ்ற்றன் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பஸ் போக்குவரத்து சேவை ஒழுங்கற்ற முறையில் இடம்பெற்று வருவதாக ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச பொறுப்பாளரும், காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஊரி பாலாவோடை பிட்டிஎல்லை மற்றும் தோப்புக்காடு கிராமங்களில் இருந்து இப்பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களின் போக்குவரத்து விடயமாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் காரைநகர் கிளையில் அக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களாலும், காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராலும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த பஸ் சேவை ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை என காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இந்த பஸ் சேவையானது காலை நேரத்தில் மாத்திரம் இடம்பெற்று வரும் நிலையில், பாடசாலை முடிவடையும் நேரத்தில் இடம்பெறுவதில்லை எனவும், பாடசாலை மாணவர்களின் நலன்கருதி மதியநேரத்திலும் இச்சேவை மேற்கொள்ளப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதுடன், இச்சேவையை நிரந்தர சேவையாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஊரி பாலாவோடை பிட்டிஎல்லை மற்றும் தோப்புக்காடு கிராம மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்வதாக ஈ.பி.டி.பியின் காரைநகர் பொறுப்பாளர் வீரமுத்து கண்ணன் தெரிவித்தார்.

|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |