 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | தேர்தல் தொடர்பாக மேலதிக முறைப்பாட்டுப் பிரிவுகள் அமைக்கப்படும் |
| | | 07.08.2012 - செவ்வாய்க்கிழமை
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மேலதிகமான தேர்தல் முறைப்பாட்டு பிரிவுகள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அநுராதபுரம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் விசேட தேர்தல் முறைப்பாட்டு பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.
அநுராதபுரம் மாவட்டத்தில் 5 முறைப்பாட்டு பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் 2 முறைப்பாட்டு பிரிவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 முறைப்பாட்டு பிரிவுகளும் தேர்தல்கள் ஆணையாளரால் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் சந்திப்பில் ஆராயப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை ஆகியவற்றில் இதுவரை எந்தவிதமான பாரதூரமான வன்முறைகளும் நடைபெறவில்லை. எனினும், தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஏதுவாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் விசேட முறைப்பாட்டு பிரிவுகளை தேர்தல்கள் ஆணையாளர் அமைக்கவிருப்பதாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
நடைபெறவிருக்கும் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து ஒழுக்கக்கோவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு இது விரைவில் வெளியிடப்படும் எனவும் கட்சியின் செயலாளர்கள் சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் கூறியிருந்ததாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கூறினார்.
இதேவேளை, தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளுக்குத் தனித்தனியாக விசேட குழுக்களை அனுப்பி அங்குள்ள நிலவரங்கள் குறித்து அறிந்து கொண்டதாகவும், தற்போது அங்குள்ள அமைதியான நிலைமைக்கு அமைய வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களுக்கான அவசியம் இல்லையென்றும் தேர்தல்கள் ஆணையாளர் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |