 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | பின்தங்கிய பிரதேசங்களை முன்னோக்கி கொண்டு செல்வதே எமது செயற்பாடுகளில் முதன்மையானது - ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் |
| | | 06.08.2012 - திங்கட்கிழமை
பின்தங்கிய பிரதேசங்களின் முன்னேற்றங்களை முதன்மையாகக் கொண்டே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோhம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வை. தவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (6) கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 27 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள முன்பள்ளி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்பது மிகவும் இன்றியமையாதது அதனை கருத்தில் எடுத்தே எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் இதற்காக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் மக்களுக்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
அரசினால் அமைக்கப்படுகின்ற கட்டிடங்கள் வெறுமனே அழகு பார்ப்பதற்காகவே அல்லது பயன்பாடற்ற கட்டிடங்களாகவே இருக்கக் கூடாது அது அதன் முழுப்பயனையும் அடைய வேண்டும் அதிலிருந்து மக்களும் உச்ச பயனை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினரான இராமச்சந்திரன் மீள் எழுச்சித் திட்ட பிரதிப்பணிப்பாளர் விஜயகிருஸ்ணன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச தொடர்பாளர் தில்லைவேல் கிராம அலுவலர் அருந்தமிழ்ச்செல்வன் மற்றும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |