 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | மீள்குடியேற்ற பணிகளில் இலங்கை பெரும் சாதனை |
| | | 06.08.2012 - திங்கட்கிழமை
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத யுத்தம் முடிவடைந்ததை அடுத்து 4 இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரை மீள்குடியேற்றி இருக்கும் அரசாங்கத்தின் சாதனையை ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒன்றிணைப்பு காரியாலயத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஜோன் ஜிங் பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கு இது தொடர்பாக கூடுதலாக தொடர்ந்தும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று நிதி வழங்கும் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களை மீள்குடியேற்றுவதிலும் அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதிலும் இலங்கை அரசாங்கம் சாதனை புரிந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒன்றிணைப்பு காரியாலயத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஜோன் ஜிங் தெரிவித்துள்ளார். அவர் மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்து நியூயோர்க் திரும்பும் போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கானோரை பலியெடுத்த எல்.ரி.ரி.ஈ யுத்தத்தை 2009 இல் அரச படைகள் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்ததை அடுத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு மீள்வாழ்வளித்து மீள்குடியேற்றும் பணிகளையும் சிறப்பாகச் செய்திருக்கின்றது என்றும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் நிறைவேற்றி இலங்கையில் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தி அபிவிருத்தி யுகத்தை தோற்றுவிக்கும் என்பதில் தனக்கு அசையாத நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்த இவர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் சென்று அங்கு இடம்பெறும் அபிவிருத்தித்திட்டத்தை நேரில் பார்வையிட்டார். சுமார் 20 ஆண்டுகாலம் சீர்குலைந்து போன தெல்லிப்பளைப் பிரதேச மக்களைச் சந்தித்த அவர் தாங்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி வருகின்றோம் என்றும் அவரிடம் எடுத்துரைத்ததாக அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது அரசாங்கம் புதிய கழிவறைகள், சுத்தமான குடிநீர், இருப்பிடவசதி, மின்விநியோகம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவிகளைச் செய்து வருகின்றது என்றும் திரு. ஜோன் ஜிங் தெரிவித்தார். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |