Home English Tamil
     
   
 
 வடபகுதி அபிவிருத்தியில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 

22.06.2012 - வெள்ளிக்கிழமை

ஏனைய பகுதிகளையும் விட வடபகுதி அபிவிருத்தியில் ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனை எமது மக்கள் சரிவரப் பயன்படுத்தி பொருளாதாரத்துறையில் நிலையான முன்னேற்றங்களை எட்ட வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

முல்லைத்தீவு  மாவட்டத்திற்கான வாழ்வு எழுச்சி முன்னேற்பாட்டுக் கூட்டம் இன்றைய தினம் (22) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் இப் பகுதியானது கடந்த காலங்களில் பாரிய அழிவுக்குட்பட்டிருந்தது. அந்த நிலையிலிருந்து மீண்டு இப்போது படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் வாழ்வு எழுச்சித் திட்டம் போன்ற நல்ல திட்டங்களை இப்பகுதி மக்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.

இத் திட்டத்தின் மூலம் மரக்கறி வகைகள் பழ வகைகள் உற்பத்தி கடற்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு சிறு கைத்தொழில் முயற்சிகள் என்பன தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு உபகரணங்கள் மற்றும் வங்கிக்கடன் வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

இத் திட்டத்தின் மூலம் உரிய பயன்களைப் பெற்று தங்களது குடும்ப பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதுடன் போசாக்குள்ள குடும்பங்களைக் கட்டியெழுப்பவும் இயலும்.

இதன் ஊடாக கிராமத்தின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு நாட்டின் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து பங்களிப்புகளை வழங்க முடியும்.

எனவே உங்களது பொருளாதார நிலையை நிலைப்படுத்திக் கொள்வதற்கு இத் திட்டத்தின் மூலம் பயன்பெற அனைவரும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.