Home English Tamil
     
   
 
 இப்பகுதி முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டும் அமைச்சர் - சிவஞானசோதி
 

22.06.2012 - வெள்ளிக்கிழமை

இப்பகுதியின் அபிவிருத்தி முன்னேற்ற செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. சிவஞானசோதி தெரிவித்தார்.

இன்றைய தினம் (22) வாழ்வு எழுச்சித் திட்டத்திற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் அவர்கள் இக் கூட்டத்தை மாவட்ட செயலாhளரும் நானும் நடத்த முடியும். எனினும் இப் பகுதி மக்களுக்கு இத் திட்டத்தின் செயற்பாடுகள் ஒழுங்காகக் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் இப் பகுதி மீதுள்ள அக்கறையினாலும் இரண்டு தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் இன்று அதிகாலை புரப்பட்டு முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளார்.

அமைச்சர் அவர்கள் இந்தளவு அக்கறையுடன் செயற்படுவதால் வாழ்வு எழுச்சி திட்டத்தின் மூலம் இப் பகுதி மக்கள் உச்ச பயன்களைப் பெற வேண்டும். இதுவே அமைச்சர் அவர்களது எதிர் பார்ப்பாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நாடளாவிய ரீதியில் வாழ்வு எழுச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி வவுனியா போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே இக் கண்காட்சிகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 16 வது கண்காட்சியாக இக் கண்காட்சி எதிர்வரும் மாதம் 28ம் 29ம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.