 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | கோழிப்பண்ணைக்கு என்ற போர்வையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சப்பாத்துகள் வாசனைத் திரவியங்கள் கைப்பற்றப்பட்டன |
| | | 22.06.2012 - வெள்ளிக்கிழமை
முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட கோழிப்பண்ணை நிறுவனமொன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனிலிருந்து 15 மில்லியன் ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள் சப்பாத்துக்கள் மற்றும் ஆடம்பர பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் இலிகிதர் உட்பட நால்வர் பல மில்லியன் ரூபா சுங்கவரியை செலுத்தாமல் இப்பொருட்களை கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கப்பணிப்பாளர் ரஞ்சன் கனகசபை பிரதி சுங்கப்பணிப்பாளர்களான ஏ.ரி. வலவகே சனத் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேற்படி தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இக்கடத்தல் நடவடிக்கையின் சூத்திரதாரியை கைது செய்வதற்கான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |