 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | இலங்கையின் சனத்தொகை 2 கோடியைத் தாண்டியது. |
| | | 22.06.2012 - வெள்ளிக்கிழமை
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தகவல்களை வெளியிட்ட பிரதி அமைச்சர் இந்த நாட்டில் 36 ஆயிரத்து 807 கிராமங்கள் உள்ளதோடு ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வாழ்வதாகவும் இந்த கணிப்பீட்டின்படி 14 ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளதோடு 313 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. மேலும் குடிசன மதிப்பீட்டு பணிகள் 2012 பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்றது. மொத்த சனத்தொகையில் ஒரு கோடி 5 இலட்சத்து 12 ஆயிரம் பெண்களும் ஒரு கோடி 3 இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |