 |
|
| |
|
|
| |
Article Contents |
|
| |
| | | இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்! |
| | |
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளைச் செய்யுமாறு செயலாளர் நாயகம் அவசரக் கோரிக்கை!
வன்னிப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப்
பகுதிகளுக்கு வந்திருக்கும் சுமார் இரண்டு இலட்சம் வரையிலான பொதுமக்கள்
போதியளவு உணவு தண்ணீர் மருந்துப் பொருட்கள் சிறுவர்களுக்கான பால்மா வகைகள்
மாற்று உடுப்புக்கள் தங்குமிட வசதியின்றி மிகுந்த சிரமங்களுக்கு முகம்
கொடுத்துள்ளனர்.
அரசாங்கமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கான உதவிப்பணிகளை
முன்னெடுத்து வருகின்ற போதிலும் எதிப்பாராத அளவில் பெரும் எண்ணிக்கையில்
வந்திருக்கும் இந்த மக்களுடைய அவசர தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும்
சிரமங்கள் எதிர்நோக்கபடுகின்றது.
இதனால் இந்த மக்களுக்கு வேண்டிய அவசர உதவிகளை உடனடியாக முன்வந்து
செய்யுமாறு மனிதாபிமான உள்ளங்கொண்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.
இம்மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களான பிஸ்கட் வகைகள் போத்தலில்
அடைக்கப்பட்ட தண்ணீர் பிற அனைத்து வகை உணவுப் பொருட்கள் மற்றும்
உடுபுடைவைகள் பாய் தலையணை போன்றவற்றை இல.61 இசிப்பத்தான மாவத்தை கொழும்பு - 5 இல் அமைந்துள்ள சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அந்தந்தப் பிரதேசங்களில் உதவிப் பொருட்களை சேகரிப்பதற்கான மையங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
060 20 50 331
060 20 50 329
இந்த அவசர மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு
வழங்க அனைத்து ஊடக நிலையங்களும் முன்வரவேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன்.
மக்கள் சேவையிலுள்ள
டக்ளஸ் தேவானந்தா பா.உ
செயலாளர் நாயகம் - ஈ.பி.டி.பி.
அமைச்சர் - சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Tamilnewsweb, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |